கட்டுமானத் தாமதம் - Builder மேல் இழப்பீடு கேட்கலாமா?

Consumer Rights · April 17, 2025 · By Adv. B. Sivasubramanian

தமிழ் · Tamil Article

Apartment வாங்கி பணம் கட்டிவிட்டீர்களா? ஆனால் Builder சொன்ன தேதிக்கு வீடு தரவில்லையா? இது உங்கள் உரிமை மீறல். நீங்கள் இழப்பீடு கோரலாம்.

RERA என்னும் சக்திவாய்ந்த சட்டம்:

Real Estate Regulation and Development Act, 2016 அதாவது RERA வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் வலுவான பாதுகாப்பு தருகிறது. தமிழ்நாடு RERA TNRERA என்று அழைக்கப்படுகிறது.

  • Builder கட்டி தர தாமதம் ஆனால் ஒவ்வொரு மாதமும் வட்டி இழப்பீடு கொடுக்க வேண்டும்.
  • Project Registration இல்லாமல் Builder விற்கவே முடியாது.

என்னென்ன இழப்பீடு கேட்கலாம்:

  • தாமதமான மாதங்களுக்கு வட்டி இழப்பீடு கேட்கலாம்
  • வாடகையில் இருந்தால் அந்த வாடகை பணம் திரும்ப கேட்கலாம்
  • மன உளைச்சல் மற்றும் சட்ட செலவுகள் கேட்கலாம்
  • வீடே வேண்டாம் என்று திரும்ப பணம் வாங்கிக்கலாம்
  • Consumer Forum ல் வழக்கு போட்டும் இழப்பீடு பெறலாம்

எங்கே புகார் கொடுக்கலாம்:

  • TNRERA ல் Online Complaint பதிவு செய்யலாம்
  • Consumer Disputes Redressal Commission ல் வழக்கு தொடரலாம்
  • Civil Court ல் Money Recovery Suit போடலாம்

முக்கியமான ஆவணங்கள்:

  • Sale Agreement மற்றும் Registration Documents
  • Payment Receipts அனைத்தும்
  • Builder உடன் நடந்த அனைத்து Correspondence
  • Brochure மற்றும் Advertisements

📞 இப்போதே ஆலோசனை பெறுங்கள்: Adv. B. Sivasubramanian — +91 97104 21215

Back to all articles