சிவில் சட்டம் என்பது தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையேயான தகராறுகளை தீர்க்கும் சட்ட முறை. இழப்பீடு, தடை உத்தரவு, சொத்து திரும்ப பெறுவது போன்ற நிவாரணங்கள் வழங்கப்படும்.
சிவில் சட்டம் என்னென்ன விஷயங்களை உள்ளடக்கியது:
சொத்து மற்றும் நில தகராறுகள், பணம் வசூல் வழக்குகள், ஒப்பந்த மீறல் வழக்குகள், குடும்ப சொத்து பிரிவு, வீட்டு உரிமையாளர்-வாடகைதாரர் தகராறுகள், உரிமைகளை நிலைநாட்டும் Declaratory Suit கள்.
தமிழ்நாட்டில் சிவில் வழக்குகள் எங்கே தாக்கல் செய்வது:
வழக்கின் மதிப்பை பொறுத்து District Munsiff Court, Sub-Court, District Court அல்லது Madras High Court ல் தாக்கல் செய்யலாம்.
சிவில் வழக்கு நடைமுறை:
படி 1: Legal Notice அனுப்புங்கள்.
படி 2: Plaint தாக்கல் — வழக்கறிஞர் மூலம் விரிவான மனு தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படும்.
படி 3: Summons — எதிர் தரப்பு Written Statement தாக்கல் செய்வார்கள்.
படி 4: ஆவண சாட்சியங்கள் மற்றும் வாதங்கள்.
படி 5: Decree — நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
காலக்கெடு மிக முக்கியம்:
பெரும்பாலான சிவில் வழக்குகளை 3 வருடத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். தாமதம் செய்யாதீர்கள் — உடனே வழக்கறிஞரை அணுகுங்கள்.
நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கலாமா:
ஆம் — Lok Adalat, Mediation, Arbitration மூலம் விரைவாக தீர்க்கலாம். நல்ல வழக்கறிஞர் உங்கள் உரிமைகளை பாதுகாத்தபடி சரியான வழியை தேர்ந்தெடுக்க உதவுவார்.
📞 இப்போதே அழைக்கவும்: +91 97104 21215 | Adv. B. Sivasubramanian, Chennai