பெற்றோர் இறந்த பிறகு அல்லது கூட்டுக் குடும்பம் பிரியும் போது சொத்து பிரிப்பு மிகவும் சிக்கலான விஷயமாக மாறிவிடுகிறது. சரியான சட்ட வழிமுறையை பின்பற்றினால் தகராறு இல்லாமல் சொத்தை பிரித்துக்கொள்ளலாம்.
யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்கும்:
- Hindu Succession Act, 1956 படி தந்தையின் சொத்தில் அனைத்து மகன்களுக்கும் சம பங்கு உண்டு.
- மகள்களுக்கும் மகன்களுக்கு சம பங்கு உண்டு என்று 2005 திருத்தம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
- தாத்தா சொத்து அதாவது Ancestral Property யில் பிறப்பிலிருந்தே உரிமை உண்டு.
- சொந்தமாக சம்பாதித்த சொத்தை Self Acquired Property யாரிடம் விட்டுச் செல்வது என்று எழுதி வைக்கலாம்.
சொத்து பிரிக்கும் வழிமுறைகள்:
- ஒத்துழைப்புடன் பிரிக்கும் முறை: அனைத்து வாரிசுகளும் சேர்ந்து பேசி Partition Deed எழுதி பதிவு செய்துகொள்வது. இது மிகவும் எளிதான மற்றும் குறைந்த செலவு முறை.
- நீதிமன்ற வழி: ஒருவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் Civil Court ல் Partition Suit தொடரலாம். நீதிமன்றம் சொத்தை அளவிட்டு நியாயமாக பிரித்துக்கொடுக்கும்.
- நடுநிலையாளர் மூலம்: குடும்பத்தினர் அனைவரும் ஒரு நடுநிலையாளரை நியமித்து சொத்தை பிரிக்கலாம்.
Partition Deed பதிவு ஏன் அவசியம்:
- வாய்மொழியாக சொத்தை பிரித்துக்கொண்டாலும் எதிர்காலத்தில் தகராறு வரலாம்.
- Partition Deed பதிவு செய்தால் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.
- Bank Loan, Sale, Transfer எல்லாவற்றுக்கும் இந்த Document தேவைப்படும்.
📞 இப்போதே ஆலோசனை பெறுங்கள்: Adv. B. Sivasubramanian — +91 97104 21215